We Serve those who have Served the Nation

நாட்டிற்கு பணிவிடை செய்தவர்களுக்கு நாங்கள் பணிவிடை செய்கிறோம்




A). Applications are received in person from 10.30 A.M to 01:00 P.M and for enquiry between 3.00 P.M to 4.00 P.M on all working days.
B). For ONLINE Application, the applicants will have to furnish all the details required in the website. If all the details are filled up, one computer generated Acknowledge Number will be assigned to that particular application. A print out of the application must be taken by the applicant and submit the same in District Ex-Servicemen Welfare Office.
C). If the applicant does not handover the application to District Ex-Service Welfare Office within 30 days, the application will automatically be cancelled.
D). As per rule the prescribed application form should be completed, signed and presented by the applicant himself / herself, to whom the documents belong, during the specified timings and he / she should be ready to give any clarification / produce relevant documents sought for by the Authenticating Officer at the time of submission.
E). The applicant should enclose Photo Copies of required Certificates along with the application form.
F). Status of the progress on applications will be available in Online. The individuals should come in person and collect their ID. This Department is not responsible for ID Card not collected from the concern District Ex-Service Welfare Office within a reasonable amount of time.
G). Do not contact any outsiders to process your application. Contact only the staff of District Ex-Service Welfare Office for any information / clarifications.
H). In case, fake certificates are presented, the fake certificates will be seized and action will be taken against all concerned under the appropriate law.

அ). விண்ணப்பங்கள் அனைத்து வேலைநாட்களிலும் காலை 10.30 மணியிலிருந்து மதியம் 1.00 வரை நேரடியாக பெறப்படும் மற்றும் விசாரணை பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணி வரை மேற்கொள்ளலாம்.
ஆ). இணையவழி விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கும்போது , தேவையான அனைத்து விபரங்களையும் விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் அளிக்க வேண்டும். இவ்வாறு அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்தபின், கணினியால் உருவாக்கப்படும் ஒப்பளிப்பு எண் ஒதுக்கீடு செய்யப்படும். விண்ணப்ப நகல் அச்செடுக்கப்பட்டு மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பதாரரால் அளிக்கவேண்டும்.
இ). விண்ணப்பதாரரால் 30 நாட்களுக்குள் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் ஒப்படைக்கப்படாமல் இருந்தால், அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
ஈ). விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு அளிக்கும் போது, அவ்விண்ணப்பம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அலுவலரால் தெளிவுரை/தொடர்புடைய ஆவணங்கள் கோரப்படும் நேர்வுகளில் விண்ணப்பதாரர்கள் அவற்றை அளிக்கவேண்டும் .
உ). விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களுடன் உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்திடல் வேண்டும் .
ஊ). அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர், தங்கள் அடையாள அட்டையினை நேரடியாக மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு வருகை தந்து பெற்றுக்கொள்ள வேண்டும். போதுமான கால அவகாசத்திற்குப்பின் பெற்றுக்கொள்ளப்படாத அடையாள அட்டைக்கு, இத்துறை பொறுப்பேற்காது.
எ). விண்ணப்பத்தினை குறித்து தகவல் பெறுவதற்கு வெளியாட்களிடம் தொடர்பு கொள்ள வேண்டாம். விண்ணப்பம் குறித்த தகவல்/தெளிவுரைகளை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக ஊழியர்களிடம் தொடர்பு கொண்டு பெறலாம்.
ஏ). போலி சான்றிதழ்கள் அளிக்கப்பட்டால், அச்சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
...